சீமான் வந்துட்டாரு... திருமா தயங்கிட்டாரு!

சீமான்
சீமான்

சென்னை அருகே பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கான அறிவிப்பு வந்ததிலிருந்தே, அப்பகுதியைச் சேர்ந்த 12 கிராமத்தினரும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். இவர்களுக்கு தைரியம் சொல்வதற்காக முதல் ஆளாக  வந்த சீமான், பொதுக் கூட்டம் போட்டு பூகம்பம் கிளப்பிச் சென்றார். இதைத் தொடர்ந்து அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் என அனைத்துக் கட்சியினரும் ஒப்புக்காக அப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்டனர். பாமக தரப்பில் காஞ்சிபுரத்தில் வைத்து கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்தினார் அன்புமணி ராமதாஸ்.

”எல்லாரும் வந்துட்டாங்க... நீங்களும் வரலைன்னா நல்லாருக்காதுண்ணே” என்று விசிக தலைவர் திருமாவுக்கு அக்கட்சியினர் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தார்களாம். இதையடுத்து, நேற்று திருமா பரந்தூர் பகுதிக்கு வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை வரவேற்க விசிகவினரும் தயாரானார்கள். ஆனால் கடைசி நேரத்தில், போலீஸ் அனுமதி கொடுக்காததைக் காரணம் காட்டி பரந்தூர் பயணத்தை ரத்துசெய்துவிட்டாராம் திருமா. இதைக் விமர்சிக்கும் அதிமுகவினர், “கூட்டணி தர்மத்துக்காக இதைக்கூட செய்யலைன்னா எப்பூடி?” என்று விசிகவினரை ஒரண்டை இழுக்கிறார்களாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in