அருமனையின் ‘அருமை’ தெரியாமல் இருக்கிறாரே திருமா!

பினராயி உடனான சந்திப்பின் போது...
பினராயி உடனான சந்திப்பின் போது...

ராகுலின் இந்திய ஒற்றுமை பயண நிகழ்வுக்கு கூட்டணிக் கட்சிகள் யாரும் அழைக்கப்படவில்லை. முதல்வர் என்னும் அடிப்படையிலேயே மு.க.ஸ்டாலின் ராகுல் நடைபயணத்தை தொடக்கிவைத்தார். இருந்தும், அழைக்காமலேயே நிகழ்வுக்கு வந்திருந்தார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். மேடையில் உரையாற்றவில்லை என்றாலும் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து குமரியிலேயே முகாமிட்டிருந்த திருமா, நேற்று ஓணம் பண்டிகைக்காக கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல நேரம் கேட்டாராம். மறுப்பேதும் சொல்லாமல் 15 நிமிடங்களிலேயே அனுமதி கொடுத்துவிட்டார் களாம் காம்ரேடுகள். இந்த சந்திப்பின் போது பினராயி விஜயன் தனது மனைவியையும் அழைத்து அறிமுகம் செய்து வைத்ததை சிலாகித்து குறிப்பிட்டுள்ளார் திருமா.

ராகுல் நடை பயணம், பினராயி சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு திருமாவை அழைத்துச் சென்றவர் அருமனை ஸ்டீபன். அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கத்தை நடத்திவரும் ஸ்டீபன், கூட்டுப் பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கி பிணையில் வந்தவர். தற்போது விசிகவில் சமூக நல்லிணக்கப் பேரவையின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருக்கும் ஸ்டீபன் எது சொன்னாலும் அப்படியே தலையாட்டுகிறாராம் திருமா. இதை விசிகவில் உள்ளவர்களே அவ்வளவாய் ரசிக்கவில்லை. பாலியல் குற்றப் பின்னணி உள்ள ஒரு நபரை கேரள முதல்வருடனான சந்திப்பு வரைக்கும் அழைத்துச் சென்றுவிட்டாரே திருமா என தென் கோடி சிறுத்தைகள் முனுமுனுக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in