தஞ்சை திமுகவும்... தடதடக்கும் கோஷ்டிகளும்!

டி.கே.ஜி.நீலமேகம்
டி.கே.ஜி.நீலமேகம்

திமுக கோட்டையான தஞ்சாவூரில் 2011, 2016 சட்டப் பேரவைத் தேர்தல்களில் அதிமுக வெற்றிக்கொடி நாட்டியது. காரணம், திமுகவுக்குள் தலைவிரித்தாடிய கோஷ்டிச் சண்டை. விஷயம் தெரிந்து 2019-ல் பஞ்சாயத்தைக் கூட்டி அதை சரிசெய்தார் ஸ்டாலின். அதன் பிறகு மீண்டும் தஞ்சை, திமுக வசமானது. இந்த நிலையில், இப்போது மீண்டும் கோஷ்டி கானம் ஓங்கி ஒலிக்கிறது. பழனிமாணிக்கம் அணி, துரை சந்திரசேகரன் அணி, உபயதுல்லா அணி, சண்.ராமநாதன் அணி, அஞ்சுகம் பூபதி அணி என திக்கெட்டும் திமுக கோஷ்டிகள் திகைக்கவைக்கிறார்கள். போதாதுக்கு, தஞ்சை நகர திமுக செயலாளராக இருக்கும் டி.கே.ஜி.நீலமேகம் எம்எல்ஏ-வும் தனி ஆவர்த்தனம் செய்வதாகப் புகார் வாசிக்கிறார்கள். கட்சியினருடன் அனுசரித்துப் போகாத நீலமேகம், உட்கட்சித் தேர்தலில் உறவினர்களையும் வேண்டப் பட்டவர்களையுமே பொறுப்புக்குக் கொண்டு வந்திருக்கிறாராம். இதை எல்லாம் இப்போதே விசாரித்து சரி செய்யாவிட்டால் தஞ்சையை மீண்டும் திமுக கோட்டைவிட வேண்டியதுதான் என்கிறார்கள் பட்டு அனுபவித்த பழைய திமுககாரர்கள்!

உட்கட்சி தேர்தலில் தனது உறவினர்கள், வேண்டியப்பட்டவர்களுக்கே அதிகளவில் பொறுப்புகளை கொடுத்திருப்பது, தொகுதி மக்கள், கட்சிக்காரர்களுடன் தொடர்பில் இல்லாதது, தொகுதி பிரச்சினைகள் குறித்து கண்டு கொள்ளாதது, யாரையும் அனுசரிக்காதது என்று அடுக்கடுக்காக அவர் மேல் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் திமுகவினர். இதனால் தலைமையின் கோபப் பார்வையில் இருக்கிறார் நீலமேகம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in