சறுக்கினாரா சரவணக்குமார்?

சறுக்கினாரா சரவணக்குமார்?
அ.பிரகாஷ்

தஞ்சை மாநகராட்சி ஆணையராக இருக்கும் சரவணக்குமார் நேர்மையான மனிதர் என பெயரெடுத்தவர். எனினும், கட்சி பேதமின்றி இவர் எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகளை பொதுமக்கள் பாராட்டினாலும் தொகுதியின் திமுக எம்எல்ஏ-வான நீலமேகம் தரப்புக்கு எட்டிக்காயாகிப் போனார் சரவணக்குமார். இந்த நிலையில், அண்மையில் தஞ்சை மாமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்ட திமுகவைச் சேர்ந்த அ.பிரகாஷ் என்பவரை அதிரடியாய் தகுதி நீக்கம் செய்தார் சரவணக்குமார். பிரகாஷின் தம்பி மாநகராட்சி ஒப்பந்ததாரராக இருக்கிறார் என்பதே இதற்கு சொல்லப்பட்ட காரணம். இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால் எம்எல்ஏ-வானநீலமேகத்தின் அக்காள் மகன் தான் இந்த பிரகாஷ். ஆணையரின் தகுதி நீக்க உத்தரவை நீதிமன்றத்தை நாடி தகர்த்து பழையபடி மாமன்ற உறுப்பினராக வலம் வருகிறார் பிரகாஷ். மாநகராட்சிக்குள் இனி என்ன களேபரம் நடக்குமோ என அதிகாரிகள் அஞ்சிக் கொண்டிருக்க, “நீலமேகத்தின் மீதுள்ள வருத்தத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரகாஷ் விஷயத்தில் ஆணையர் இத்தனை அவசரப்பட்டிருக்க வேண்டாம்” என நீலமேகத்தை பிடிக்காத திமுககாரர்களே கிசுகிசுக்கிறார்கள்.

Related Stories

No stories found.