தர்பார் நடத்தும் தஞ்சை உதயநிதி!

உதயநிதியுடன் தஞ்சை உதயநிதி
உதயநிதியுடன் தஞ்சை உதயநிதி

தஞ்சை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத் தலைவராக இருக்கிறார், தஞ்சை உதயநிதி. கடந்த வாரத்தில் பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு ‘வருங்காலமே, எங்கள் எதிர்காலமே’ என்றெல்லாம் போஸ்டர் அடித்து அமர்க்களப்படுத்தினார்கள் அவரது ஆதரவாளர்கள். இதைப் பார்த்துவிட்டு, எந்த உதயநிதிக்குப் பிறந்தநாள் என்று தஞ்சை மக்களே சற்று குழம்பிப் போனார்கள். இதற்கு அடுத்த நாள், தஞ்சை உதயநிதியின் லாரி ஒன்று மணல் கடத்தலில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து போன்கள் பல முனைகளிலும் இருந்து பறக்க, லாரி ஓனரை விட்டுவிட்டு, அவரது லாரியை மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தியதாகச் சொல்லி வழக்கை எழுதிவிட்டது போலீஸ். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தஞ்சை உதயநிதியைப் பார்த்தால் உடன்பிறப்புகளே ஸ்லைட்டா ஜெர்க் ஆகிறார்களாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in