பண்டரிக்காக பந்தாடப்பட்ட பதிவாளர்!

பண்டரிநாதன்
பண்டரிநாதன்

அதிமுகவைச் சேர்ந்த, தஞ்சாவூர் கூட்டுறவு நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலையின் தலைவர் பண்டரிநாதன், அண்மையில் திமுகவில் ஐக்கியமானார். இதனால், இதுநாள் வரை அவருக்கு ஆதரவளித்து வந்த அதிமுக உறுப்பினர்கள், பண்டரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடிவெடுத்து, தஞ்சாவூர் சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் எஸ்.குமாரசுந்தரத்திடம் நோட்டீஸ் கொடுத்தார்கள்.

டி.கே.ஜி.நீலமேகம்
டி.கே.ஜி.நீலமேகம்

இதையடுத்து, அவரும் அதற்காக தனி அதிகாரியை நியமித்து கூட்டத்தை நடத்த உத்தரவிட்டாராம். சும்மா இருப்பார்களா ஆளும்கட்சிக்காரர்கள்? விஷயம் தஞ்சை தொகுதி திமுக எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகத்தின் காதுக்குப் போக, துணைப் பதிவாளர் குமாரசுந்தரத்தைக் குன்னூருக்கு டிரான்ஸ்பர் போட்டுவிட்டார்களாம். நேர்மையாகப் பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் மட்டுமே நினைத்தால் போதுமாக்கும் என்று பதிவுத் துறை அதிகாரிகள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in