தங்கத்தின் பதவிக்கே பங்கம்!

தங்கத்தின் பதவிக்கே பங்கம்!
தங்க தமிழ்ச்செல்வன்

ஓபிஎஸ்சுக்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே திமுகவில் சேர்க்கப்பட்டு, உசுப்பிவிடப்பட்ட தங்கதமிழ்ச்செல்வனை இப்போது திமுக மேலிடத்தில் யாரும் தேடுவதே இல்லையாம். தேர்தலில் தோற்றதால் பெரும் நிதிச் சிக்கலில் இருக்கும் தங்கம், வெளிக் கிளம்பினால் வெட்டியாய்ச் செலவுவரும் என்பதால் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறாராம். இதனால் கட்சித் தலைமை இவர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். போதாக்குறைக்கு, கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தேனி நகர்மன்றத் தலைவராக தன் மனைவியை ஜெயிக்க வைத்த நகர் செயலாளர் பாலமுருகன் செய்யும் அடாவடி வேலைகளில் எல்லாம் இவரது பெயரும் சேர்ந்து அடிபடுகிறது. இதனால் தங்கத்தின் மாவட்டச் செயலாளர் பதவிக்கே பங்கம் வரலாம் என்கிறார்கள் தேனி திமுகவினர்!

Related Stories

No stories found.