
குமாரபாளையம் தொகுதியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக தன்வசமாக்கி இருக்கும், முன்னாள் அமைச்சர் பி. தங்கமணியால் குமாரபாளையம் நகராட்சியைக் கடந்த 2011 தேர்தலில் வசப்படுத்த முடியவில்லை. அப்போது, அதிமுகவில் தனக்கு சீட் கொடுக்காததால் தனது ஆதரவாளர்களுடன் சுயேச்சையாக போட்டியிட்ட தனசேகரன் என்பவர், நகராட்சியைக் கைப்பற்றி அதிமுகவை காலி செய்தார். அமைச்சராக இருந்தும் தன்னால் தனது தொகுதிக்கு உட்பட்ட நகராட்சியை கைப்பற்ற முடியவில்லையே என்ற வருத்தமும் ஆதங்கமும், கடந்த 10 வருடமாகவே தங்கமணிக்கு உண்டு. இந்தத் தேர்தலில் தனசேகரன் களத்தில் இல்லாததால், 2011-ல் விட்டதைப் பிடிக்க தனது மகனையும் துணைக்கு வைத்துக் கொண்டு ரொம்பவே மெனக்கிட்டிருக்கிறார் தங்கமணி. வார்டுகளுக்குள் தாராளமாகப் பணமும் புகுந்துவிளையாடி இருக்கிறது. ஆனாலும், “பவர்ஃபுல் அமைச்சராக இருந்தபோதே பிடிக்கமுடியாமல் போனதையா இப்போது பிடிக்கப் போகிறார்?” என்று மார்தட்டி நிற்கிறது ஆளும்கட்சி முகாம். குமாரபாளையம் மக்கள் இம்முறை யாருக்கு செக் வைக்கிறார்கள் என்று பார்க்கலாம்.