தளபதியை மீறி தடுத்துவிடுவாரா தங்கம்?

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் இன்னாள் அமைச்சர் ஒருவரைப் பிடித்துக்கொண்டு காரியம் சாதித்துக் கொள்கிறார்களாம். ‘எனக்கு நீ... உனக்கு நான்’ என்ற இந்த ‘கிவ் அண்ட் டேக் பாலிசி’ எல்லா ஆட்சியிலும் நடப்பது தான் என்றாலும் இப்போது கொஞ்சம் தூக்கலாகவே இருப்பதாக ஆளும் கட்சிக்காரர்களே அங்கலாய்க்கிறார்கள். அந்த வகையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் அண்மைக்காலமாக அதிகம் நட்பு பாராட்டுகிறாராம். இந்த நட்பு தனக்கு எதிரான ரெய்டு நடவடிக்கையை மட்டுப்படுத்தி வைக்கும் உதயகுமாரின் தந்திர அரசியல் என்கிறார்கள் அதிமுககாரர்கள். திமுகவினரோ, “ தளபதியை மீறி உதயகுமார் மீதான நடவடிக்கையை தங்கத்தால் நிறுத்தி வைத்துவிட முடியுமாக்கும்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in