தாவுகிறாரா தங்கம்?

திமுகவில் இணைந்த போது...
திமுகவில் இணைந்த போது...

ஓபிஎஸ் அண்ட் கோவின் ஒரண்டைகளை சமாளிக்க முடியாமல் தான் டிடிவி தினகரன் பக்கம் ஒதுங்கினார் தங்க தமிழ்ச்செல்வன். அங்கேயும் தான் நினைத்தது கைகூடாததால் அறிவாலயத்தில் அடைக்கலமானார். தனக்கு முன்னால் திமுகவுக்கு வந்த சகா செந்தில்பாலாஜியைப் போல தனக்கும் திமுகவில் மரியாதை கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால், தலைமையே அத்தகைய மரியாதையை அவருக்கு கொடுக்க நினைத்தாலும் தேனி மாவட்ட திமுகவினர் தங்கத்தை நம்பத் தயாரில்லை; தள்ளியே வைத்துள்ளனர். இதனால் சஞ்சலத்தில் இருக்கும் தங்கத்துக்கு இப்போது ரூட் க்ளியர் ஆகி இருக்கிறது. அதிமுகவிலிருந்து அடியோடு ஓரங்கப்பட்டிருக்கிறார் தங்கத்தின் பரம வைரி ஓபிஎஸ். இனியும் பட்டும் படாமலும் திமுகவில் இருப்பதைவிட பேசாமல் அதிமுகவுக்கே போய்விட்டால் என சிலர் தங்கத்துக்கு தூபம் போடுகிறார்களாம். ஈபிஎஸ் தரப்பிலும் தேனியில் ஓபிஎஸ் அண்ட் கோவை சமாளிக்க தங்கத்தைப் போல் ஒரு தளக்கர்த்தர் இருந்தால் சரியாக இருக்கும் என கணக்குப் போட்டு அவரை நோக்கி காய் நகர்த்துகிறார்களாம். முடிவு தங்கத்தின் கையில்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in