உனக்கு வேணுங்கிறத மட்டும் கேளு தங்கம்!

உனக்கு வேணுங்கிறத மட்டும் கேளு தங்கம்!
தங்க தமிழ்ச்செல்வன்

தேனி மாவட்டத்தில் நடக்கும் பெரும்பாலான அரசு திட்டப்பணிகளை இப்போதும் அதிமுக காண்ட்ராக்டர்கள்தான் எடுத்துச் செய்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருமே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்பதால், ஏகத்துக்கும் கடுப்பில் இருக்கிறாராம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன். இதுபற்றி, “நடக்கிறது நம்ம ஆட்சியா... இல்ல அதிமுக ஆட்சியான்னு சந்தேகமா இருக்குண்ணே” என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனிடமே ஆதங்கப்பட்டாராம் தங்கம். அதற்கு, “ஏம்பா, திடீர்னெல்லாம் நம்ம காண்ட்ராக்டர்களை உருவாக்க முடியாது. எத்தனை வண்டி, எவ்வளவு மெஷினரீஸ் தேவைன்னு தெரியுமா? உனக்கு என்ன வேணுமோ அதைக்கேளு. அதைவிட்டுட்டு புலனாய்வுப் புலியா எல்லாம் மாறக்கூடாது”ன்னு புத்திசொன்னாராம் துரைமுருகன். “இந்த திமுககாரங்க அரசியலைப் புரிஞ்சுக்கிடவே முடியலையேப்பா” என்று இப்போது நெருக்கமானவர்களிடம் புலம்புகிறாராம் தங்கம்.

Related Stories

No stories found.