தவியாய் தவிக்கும் தாமரை!

தவியாய் தவிக்கும் தாமரை!

ஜெயலலிதா காலத்திலேயே வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசியாக இருந்தவர் அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர் தாமரை.ராஜேந்திரன். வைத்தியின் ஆசியினாலேயே கடந்த அதிமுக ஆட்சியில் கொறடாவாகவும் இருந்தார். தற்போது ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே முட்டல் அதிகரித்த நிலையிலும் வைத்திலிங்கத்தின் கைபிடித்து ஓபிஎஸ் பக்கம் நின்றார் தாமரை. ஆனால், ஓபிஎஸ் பக்கம் விக்கெட்கள் வரிசையாக விழுந்து கொண்டே வந்ததால் தாமரையும் ஷேக் ஆகி ஈபிஎஸ் அணிக்கு தாவினார். ஆனாலும் எடப்பாடி தரப்பினர் இவரை ஸ்லீப்பர் செல் கணக்காகவே பார்க்கிறார்களாம். இதனிடையே, மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து தாமரையை நீக்கிவிட்டு, முன்னாள் எம்எல்ஏ-வான இளவழகன் அல்லது சீனியரான கவிதா ராஜேந்திரனை அந்தப் பதவியில் அமரவைக்கப் போகிறார்கள் என்றொரு செய்தியைச் சிலர் கசியவிட்டிருக்கிறார்கள். இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியாத நிலையிலும், “அவசரப்பட்டுட்டோமோ... பேசாம வைத்திலிங்கம் பக்கமே இருந்திருக்கலாமோ” என ஆதரவாளர்களிடம் புலம்பிக் கொண்டிருக்கிறாராம் தாமரை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in