ஆணையருடன் மோதும் மேயர்

ஆணையருடன் மோதும் மேயர்

தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விஷயத்தில் மக்கள் நாயகன் என பெயரெடுத்தவர். அப்படிப்பட்டவரையே திமுககாரர்கள் இப்போது போட்டுப் பார்க்கிறார்களாம். திமுக மேயர் சண்.ராமநாதன் மேயர் அங்கியை அணிந்த புதிதில் செல்லுமிடமெல்லாம் ஆணையரை வானளாவப் புகழ்ந்து தள்ளினார். இருவரும் எங்கு போனாலும் ஒன்றாகவே பயணித்தார்கள். ஆனால், அதிகாரத்தைச் சுவைத்துப் பார்த்துப் பழகியதும் பல்வேறு விஷயங்களில் ஆணையருடன் மேயர் முரண்டு பிடிக்க ஆரம்பித்துவிட்டாராம். இப்போது இருவரும் முகம்கொடுத்துப் பேசுவதே அரிது என்கிறார்கள் மாநகராட்சி ஊழியர்கள். அண்மைக்காலமாக இருவரும் ஒன்றாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை. இதனால் மக்கள் நல பணிகளும் தேக்கமடைந்துள்ளன. இதுபற்றி யாராவது கேட்டால், “அதிகாரிகள் நம்ம வேகத்துக்கு ஒத்துழைக்க மாட்டேங்கிறாங்க... என்ன செய்ய?” என்று கூலாகச் சொல்கிறாராம் மேயர் ராமநாதன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in