தன்மானத் தமிழ்மகன் உசேன்

தமிழ்மகன் உசேன்
தமிழ்மகன் உசேன்

அன்வர்ராஜா புண்ணியத்தில்(!), 85 வயதில் அதிமுக அவைத் தலைவர் ஆகியிருக்கிறார் தமிழ்மகன் உசேன். நடப்பு அரசியலைத் தாண்டி, இவருக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. குமரி மாவட்டம், தாய் தமிழகத்தோடு இணையப் பாடுபட்ட தியாகிகள் பட்டியலில் தமிழ்மகன் உசேனும் இருக்கிறார். அண்மையில், எல்லைப் போராட்டத்தில் பங்குபெற்று தற்போது உயிரோடிருக்கும் 110 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், விருதும் வழங்கினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். சென்னையில் மு.க.ஸ்டாலினும், மாவட்டங்களில் உள்ளூர் அமைச்சர்களும் இதை வழங்கினர். அப்போது, திமுகவினரின் கையால் இந்த விருதை வாங்க விரும்பாத தமிழ்மகன், இன்னொரு நாளில் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் போய் விருதையும், பரிசுத் தொகையையும் பெற்றுக்கொண்டாராம். இவரெல்லாம் இந்த வேலைக்குச் சரிப்பட்டு வருவாரா?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in