தவியாய் தவிக்கும் தமிழரசி!

தவியாய் தவிக்கும் தமிழரசி!
தமிழரசி

தற்போது மானாமதுரை ரிசர்வ் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார், முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார். ஆனால், இவருக்கும் சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் தரப்புக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. தமிழரசி மதுரைக்காரர் என்பதால், இந்த மாவட்டத்துக்குள் அவரது வளர்ச்சியை பெரியகருப்பன் அவ்வளவாக ரசிக்கவில்லை என்கிறார்கள். அண்ணனுக்கு போட்டியாக தமிழரசி வந்துவிடக்கூடாது என்பது, பெரியகருப்பன் தரப்பினரின் எச்சரிக்கை உணர்வு. இதனால், முடிந்தவரை தமிழரசியை புறக்கணிக்கிறார்கள்.

தமிழரசியின் படம் இல்லாமல்...
தமிழரசியின் படம் இல்லாமல்...

அண்மையில், தமிழரசியின் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. திறப்பாளர் பெரியகருப்பன். இதற்காக, மானாமதுரை நகர திமுக செயலாளர் பொன்னுச்சாமி வைத்திருந்த ஃபிளெக்ஸ்களில் மருந்துக்குக்கூட தமிழரசியின் பெயரோ படமோ இல்லை. ஏன் அவரது படத்தைப் போடவில்லை என்று பெரியகருப்பனும் கேட்கவில்லையாம். அமைச்சரின் ஆட்களைப் பார்த்துவிட்டு, அதிகாரிகளும் இப்போது தமிழரசியை புறந்தள்ள ஆரம்பித்து விட்டார்களாம். தமிழரசிக்காக தேர்தல் வேலை பார்த்த திமுகவினரை தவிர்த்துவிட்டு, அதிமுகவினர் சொல்லும் வேலைகளை கேட்குமளவுக்கு துணிந்துவிட்டார்களாம் அதிகாரிகள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in