தமிழ்மகன் தொடங்கிய தவ யாத்திரை!

தமிழ்மகன் உசேன்
தமிழ்மகன் உசேன்

அதிமுகவின் நிரந்தர அவைத்தலைவராக பொதுக்குழுவில் பிரகடனம் செய்யப்பட்ட தமிழ்மகன் உசேன் நீதிமன்ற உத்தரவால் மீண்டும் அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் ஆகி இருக்கிறார்.

நெல்லை மசூதியில்  பிரார்த்தனை செய்யும் தமிழ்மகன் உசேன்...
நெல்லை மசூதியில் பிரார்த்தனை செய்யும் தமிழ்மகன் உசேன்...

ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத அவர், தமிழகம் முழுவதும் 68 மசூதிகளைத் தேர்ந்தெடுத்து ஈபிஎஸ்சுக்காக பிரார்த்தனை செய்யும் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். கடந்த மே மாதம் ஈபிஎஸ்சுக்கு 68-வது பிறந்த நாள். அதையொட்டி, அவர் நீண்ட ஆயுளுடன் இருக்கவேண்டும் என்பதற்காக தமிழகத்தில் 68 முக்கியமான மசூதிகளைத் தேர்ந்தெடுத்து அங்கெல்லாம் அதிமுக தொண்டர்களுடன் சென்று பிரார்த்தனை செய்யும் திட்டத்தை வகுத்தாராம் தமிழ்மகன். ஆனால், அந்த சமயத்தில் அதிமுக பொதுக்குழுவும் அதையொட்டிய களேபரங்களும் அடுத்தடுத்து வந்துகொண்டே இருந்ததால் திட்டமிட்டபடி ஆன்மிக பயணத்தைத் தொடங்க முடியவில்லையாம்.

அதனால், ஒத்திவைத்த ஆன்மிக பயணத்தை தற்போது தனது ஆதரவாளர்கள் சகிதம் தொடங்கி இருக்கிறார் தமிழ்மகன். “நீதிமன்ற உத்தரவால் கட்சிக்குள் குழப்பம் இன்னும் அதிகரித் திருக்கிறதே” என்று கேட்டால், “அதையெல்லாம் அந்த அல்லாவும் ஈபிஎஸ்சும் பார்த்துக்கொள்வார்கள்” என புல்லரிக்க வைக்கிறார் கள் தமிழ்மகனுடன் ஆன்மிக ட்ரிப்பில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in