சு.வெ. மீது சுளீர் கோபம் ஏன்?
சு.வெங்கடேசன்

சு.வெ. மீது சுளீர் கோபம் ஏன்?

மதுரையில், மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசனை, அமைச்சர் கே.என்.நேரு ஒருமையில் விளித்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி, பிறகு அதற்காக வருத்தம் தெரிவித்தார் நேரு. “இங்க சு.வெங்கடேசன்னு ஒருத்தன் எம்பியா இருக்கிறான்ல... அவன்கிட்ட போய் கேளுங்க” என்று அப்படி எக்குத்தப்பாய் பேசுமளவுக்கு நேருவை உசுப்பிவிட்டது, உள்ளூர் உடன்பிறப்புகள் தானாம். கனிமொழி ரூட்டைப் பிடித்து மதுரை மேயர் சீட்டை மார்க்சிஸ்ட்களுக்கு வாங்க மெனக்கிடுகிறாராம் வெங்கடேசன். இதுபற்றி உள்ளூர் அமைச்சர்கள் நேருவை லேசாகக் கீறிவிட்டிருந்த நேரத்தில் தான், பத்திரிகையாளர்களின் எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு அப்படி சூடாக எகிறிவிட்டாராம் நேரு. இதுமட்டுமல்ல... மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்ட விவகாரத்தில் மதுரையின் ஆளும்கட்சியின் அதிகாரப்புள்ளிகளையும் தாண்டி, நகராட்சிகளின் இயக்குநர் அலுவலகம் வரைக்கும் சு.வெ. மூக்கை நுழைத்ததும் அமைச்சரின் சுளீர் கோபத்துக்குக் காரணம் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in