மீண்டும் சுரேஷ்ராஜன்... மிரளும் மூவர் கூட்டணி!

மீண்டும் சுரேஷ்ராஜன்... மிரளும் மூவர் கூட்டணி!
திருமண விழாவில்...

உள்ளாட்சித் தேர்தலில் உள்ளடி குற்றச்சாட்டு எழுந்ததால் சுரேஷ்ராஜனின் மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்தார் ஸ்டாலின். இந்த நிலையில், சுரேஷ்ராஜனின் மகன் தமிழ் திருமணத்தை துர்கா ஸ்டாலினே முன்நின்று நடத்தி இருப்பது குமரி மாவட்ட திமுகவினரை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. துர்காவை மட்டுமல்ல... மருமகள் கிருத்திகாவையும் திருமண விழாவுக்கு அனுப்பி வைத்திருந்த ஸ்டாலின், ‘இது நமது கழக விழா’ என்ற வாசகங்கள் கொண்ட வாழ்த்துச் செய்தியையும் அவர்களிடம் கையோடு கொடுத்தனுப்பி இருந்தார். சுரேஷ்ராஜன் மீதான நடவடிக்கைக்குப் பிறகு அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ், முன்னாள் எம்எல்ஏ-வான ஆஸ்டின் ஆகியோர் ஒரே அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட சுரேஷ்ராஜனுக்கு ஸ்டாலின் இத்தனை முக்கியத்துவம் கொடுத்திருப்பது இந்த மூவர் கூட்டணிக்கு சற்றே கிலியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.