சுறுசுறுப்படையும் சுரேஷ்ராஜன்!

சுறுசுறுப்படையும் சுரேஷ்ராஜன்!
சுரேஷ்ராஜன்

உள்ளாட்சித் தேர்தல் உள்ளடி புகாரால் திமுக மாவட்டச் செயலாளர் பதவியை இழந்த சுரேஷ்ராஜன் மீண்டும் பளிச்சென தெரிகிறார். மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதும் தனது ஆதரவாளர்களுடன் சென்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனைச் சந்தித்து தன் தரப்பு நியாயங்களை எடுத்து வைத்தாராம் சுரேஷ்ராஜன். அதற்கு கைமேல் பலனும் கிடைத்திருக்கிறது. கடந்த வாரம் அமைச்சர் எ.வ.வேலு குமரி மாவட்டத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் சுரேஷ்ராஜனுக்கு ஏக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதெல்லாம் தலைமையிலிருந்து கிடைத்திருக்கும் பாசிட்டீவான ரியாக்‌ஷன் தான் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இதனிடையே, தனது மகனின் திருமணத்திற்கு அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து அழைத்திருக்கிறாராம் சுரேஷ்ராஜன்.

Related Stories

No stories found.