வாட்டத்தில் சுரேஷ்ராஜன்... வளைக்கத் துடிக்கும் பாஜக!

வாட்டத்தில் சுரேஷ்ராஜன்... வளைக்கத் துடிக்கும் பாஜக!
சுரேஷ்ராஜன்

உள்ளாட்சித் தேர்தல் உள்குத்து அரசியலால் தனது மாவட்டச் செயலாளர் பதவியை பறிகொடுத்த முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், தனது ஆதரவாளர்கள் சகிதம் சென்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனைச் சந்தித்தாராம். அப்போது, தான் வஞ்சத்தில் விழுந்துவிட்டதாக ஆதாரங்களை அடுக்கிய சுரேஷ் ராஜன், “நாகர்கோவிலில் வெற்றிபெற்ற 24 திமுக கவுன்சிலர்களில் 13 பேர் எனது ஆதரவாளர்கள் தான். ஒருவேளை, நான் கட்சிக்கு துரோகம் நினைத்திருந்தால் அந்த 13 ஓட்டுகளும் திமுகவுக்கு எதிராகவல்லவா விழுந்திருக்க வேண்டும்” என்று நியாயம் கேட்டாராம். அத்துடன், துணை மேயர் தேர்தலில் திமுக போட்டி வேட்பாளராக களம் இறங்கிய ராமகிருஷ்ணனை போட்டியிட வேண்டாம் என தான் எச்சரித்ததையும், ஒரு கட்டத்தில் தனது செல்போன் அழைப்பையே அவர் எடுக்காமல் தவிர்த்ததையும் செல்போன் நெட்வொர்க் நிறுவனத்தின் ஆதாரத்துடன் துரைமுருகனிடம் விளக்கினாராம் சுரேஷ்ராஜன். அனைத்தையும் கேட்டுக்கொண்ட துரைமுருகன், “பொறுமையாக இருங்கள் தளபதியிடம் பேசுவோம்” என்று அவருக்கு தைரியம் சொல்லி அனுப்பினாராம். இதனிடையே, இந்த சங்கடத்தையே சாக்காக வைத்து சுரேஷ்ராஜனை, தங்கள் பக்கம் இழுக்க வியூகம் வகுக்கிறது பாஜக.

Related Stories

No stories found.