
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவியை குறிவைத்து களத்தில் நிற்கிறார் திமுக மாநகரச் செயலாளர் மகேஷ். வார்டில் இவருக்கு கடும்போட்டியை தந்து கொண்டிருக்கிறார் பாஜக வேட்பாளர் மீனாதேவ். சட்டப்பேரவை தேர்தலில் தன்னை வீழ்த்திய பாஜகவுக்கு இந்தத் தேர்தலில் பாடம்புகட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார், முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான சுரேஷ்ராஜன். அதேசமயம், அமைச்சர் மனோதங்கராஜின் அரவணைப்பில் வளரும் மகேஷ் வெற்றிபெற்று மேயரானால், தனக்கு சவாலாக வளர்ந்து விடுவாரே என்ற அச்சமும் அவருக்குள் இருக்கிறதாம். இதனால், பகையாளியை வீழ்த்துவதா பங்காளியை வீழ்த்துவதா என்று தெரியாமல், திரிசங்கு நிலையில் தவிக்கிறதாம் சுரேஷ்ராஜன் முகாம்.