யாராச்சும் இருக்கீங்களா..?

ராஜ கண்ணப்பன் அருகில் முத்துராமலிங்கம்
ராஜ கண்ணப்பன் அருகில் முத்துராமலிங்கம்

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளில் அமைச்சரான ராஜகண்ணப்பன் சென்னையிலும், மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏ-வுமான முத்துராமலிங்கம் மதுரையிலும், திருவாடானை எம்எல்ஏ-வான கருமாணிக்கம், சிவகங்கை மாவட்டத்திலும் தங்கிவிட்டார்கள். அரசு விழாக்களுக்கு மட்டுமே இவர்கள் தொகுதிக்குள் தலைகாட்டுகிறார்கள். இதுவும் போதாதென்று இப்போது மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவும் உடல் நலக்குறைவு காரணமாக, நீண்ட விடுப்பில் சென்றுவிட்டார். சுப.தங்கவேலன், தென்னவன், சத்தியமூர்த்தி, அன்வர்ராஜா, வ.து.நடராஜன், மணிகண்டன் என எல்லா ஆட்சியிலும் ஏதாவது ஒரு பவர்ஃபுல் பிரதிநிதி மாவட்டத்தைச் சுற்றிவந்த நிலை மாறி, தற்போது மாவட்டமே ஆளும்கட்சியின் அதிகாரப் புள்ளி இல்லாமல் அநாதையாக விடப்பட்டதுபோல் இருக்கிறதாம். இதற்கு நடுவில், ஆளும்கட்சிக்குள் ராஜ கண்ணப்பன் கோஷ்டியும் முத்துராமலிங்கம் கோஷ்டியும் திசைக்கொரு பக்கம் நின்று கம்பு சுற்றுவதும் பெரும் தலைவலி என்று புலம்புகிறார்கள் மாவட்ட மக்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in