சும்மா சொல்லக்கூடாது சு.வெங்கடேசனை!

சும்மா சொல்லக்கூடாது சு.வெங்கடேசனை!

மதுரை மார்க்சிஸ்ட் எம்பி-யான சு.வெங்கடேசனை திராவிடக் கட்சியில் இருந்திருக்க வேண்டிய ஆள் என்று கம்யூனிஸ்ட்களே அடிக்கடி சொல்வார்கள். தலைவர்களைவிட இயக்கமே பெரிது என்று சொல்லும் பொதுவுடமைக் கட்சியில் தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் கில்லாடி மனிதர். அந்த ரூட்டில், மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் மாநாட்டு நிகழ்ச்சிகள் அனைத்திலும் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை பின்னுக்குத் தள்ளி தன்னையே முன்னிறுத்திக் கொண்டார் சு.வெ. செம்படைப் பேரணியிலும் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் கரம் பிடித்து நடந்ததும் இவரே. எல்லாவற்றுக்கும் மேலாக, மாநாட்டு மேடையில் சீதாராம் யெச்சூரிக்கு கீழடி குறித்த புத்தகத்தைத் தெலுங்கிலேயே மொழிபெயர்த்துக் கொடுத்ததுடன் அதுபற்றி காதுக்குள் சில வார்த்தைகளைத் தெலுங்கிலேயே மாட்லாடி மகிழ்வித்தாராம்.

Related Stories

No stories found.