கைவிரித்த வேலுமணி... கைகொடுத்த தங்கமணி!

தங்கமணி
தங்கமணி


அதிமுகவின் அதிகாரபூர்வ சேனலான நியூஸ் ஜெ -யை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட தலைகள் இதுவரை நிர்வாகம் செய்து வந்தார்கள். சேனலுக்கான நிதி ஆதாரத்தை வழங்குவதில் வேலுமணி முக்கிய பொறுப்பை ஏற்றிருந்தாராம். இந்த நிலையில், தொடர் ரெய்டு உள்ளிட்ட காரணங்களால் சொத்துகள் முடக்கப்பட்டு பணத்தை வெளியில் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறாராம் வேலுமணி. இதை எடப்பாடியாரிடம் நாசூக்காக எடுத்துச் சொன்ன அவர், “வேறு யாரிடமாவது பொறுப்பை ஒப்படைத்துவிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டாராம். இதனையடுத்து சேனலுக்கான நிதி நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை முன்னாள் அமைச்சர் தங்கமணியிடம் ஒப்படைத்துவிட்டாராம் எடப்பாடியார். தட்டமுடியாமல் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தங்கமணி, முதற்கட்டமாக பெருந்தொகை ஒன்றை சேனல் நிர்வாகச் செலவுக்காக கொடுத்து உதவி இருக்கிறாராம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in