பாலாஜி பயத்தில் பதுங்கும் மணி!
எஸ்.பி.வேலுமணி

பாலாஜி பயத்தில் பதுங்கும் மணி!

அதிமுக ஆட்சியில் டெரர் அமைச்சராக வலம் வந்த எஸ்.பி.வேலுமணி, ஒரே ஒரு ரெய்டுக்கே சப்த நாடியும் அடங்கிவிட்டாராம். கோவை மாவட்டத்தில் 10 தொகுதியிலும் அதிமுக கூட்டணியை ஜெயிக்க வைத்த தெம்பில், உள்ளாட்சித் தேர்தலையும் ஒருகை பார்க்க ‘மணியான’ திட்டங்களை வைத்திருந்தார் வேலுமணி. இது தெரிந்ததும், அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவைக்கு அனுப்பினார் ஸ்டாலின். அவர் அங்கே போனதுமே வேலுமணி டோட்டல் சரண்டர். முன்பு, “விடக்கூடாது” என்று வீரவசனம் பேசிக் கொண்டிருந்தவர் இப்போது, “உள்ளாட்சித் தேர்தல்ல ஆளுங்கட்சி தானே ஜெயிக்கும்; இதென்ன புதுசா. இதுல நம்ம எதுக்கு தேவையில்லாம பணங்காச செலவு பண்ணிக்கிட்டு” என்று ஏட்டைத் திருப்பிப் போடுகிறாராம். “தம்பிக்கிட்ட மோதுனா ஏதாச்சும் சிக்கல்ல மாட்டிவிட்டுரும்” என்று செந்தில் பாலாஜி குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் கலக்கத்துடன் பேசும் வேலுமணி, அந்த அச்சத்தின் காரணமாகவே, அகன்ற கோவை மாவட்டம் என்ற தனது முந்தைய திட்டத்தை, தன்னுடைய தொண்டாமுத்தூர் தொகுதிக்குள் மட்டுமாக சுருக்கிக்கொண்டு விட்டாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in