கட்சியை மொத்தக் குத்தகைக்கு எடுத்த செல்வம்!

எஸ்.கே.செல்வம்
எஸ்.கே.செல்வம்

குடும்ப அரசியலை எல்லாம் தூக்கிச் சாப்பிடுமளவுக்கு, தான் சார்ந்த ஒரு கூட்டத்தையே கட்சிப் பதவியில் அமரவைத்து அழகுபார்த்துக் கொண்டிருக்கிறார் அமமுக அமைப்புச் செயலாளராக இருக்கும் எஸ்.கே.செல்வம். சேலம் மாநகர் மாவட்ட அமமுக செயலாளராகவும் இருக்கும் செல்வம், தனது மனைவி ராணியை சேலம் மாநகர அமமுக மகளிரணிச் செயலாளராக அமர்த்தி இருக்கிறார். இவரது கார் ஓட்டுநர் வைத்தி தான் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர். செல்வம் வீட்டில் ராமன், லட்சுமணன் என்ற இரட்டையர்கள் பணி செய்கிறார்கள். இதில் ராமன், ஒன்றிய அமமுக செயலாளராகவும், லட்சுமணன் கட்சியின் சார்பு அணி நிர்வாகியாகவும் இருக்கிறார்கள். இத்தோடு நிற்கவில்லை. தனது உதவியாளர் நேருராஜனுக்கு கட்சியின் சார்பு அணி செயலாளர் பதவியும், தனக்கு சிகிச்சையளிக்கும் சித்த மருத்துவருக்கு மாவட்ட மருத்துவரணி செயலாளர் பதவியும் போட்டுக் கொடுத்திருக்கிறாராம் செல்வம். இதையெல்லாம் பார்த்துவிட்டு, “அவரோட குடும்பமும், கூட்டாளிகளுமே கட்சிப் பதவிகள்ல இருந்துட்டுப் போகட்டும்பா” என்று சொல்லி மிச்சம், சொச்சம் இருக்கும் அமமுகவினரும் கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்களாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in