அண்ணனுக்காக அனைத்தும் செய்யும் அசோக்குமார்!

அசோக்குமார்
அசோக்குமார்

அதிமுக ஆட்சியில் ஓபிஎஸ்சுக்குப் பின்னால் இருந்து அவரது தம்பி ஓ.ராஜா எப்படி அதிகாரம் செலுத்தினாரோ அதேபோல் இப்போது அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் அண்ணனுக்குப் பின்னால் இருந்து கொண்டு அனைத்திலும் மூக்கை நுழைக்கிறாராம். அண்மையில், மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர்கள் 248 பேர் ஒரே மூச்சில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் எந்த விதிமுறைகளும் கடைபிடிக்கப்பட வில்லையாம். பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து கொடுக்க வேண்டியதைக் கொடுத்தவர்களுக்கு, விரும்பிய இடத்துக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்ததாம். இதன் பின்னணியில் அசோக்குமாரின் பெயர் பலமாகவே அடிபட்டாலும் தங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஜகா வாங்குகிறது அசோக்குமார் தரப்பு. இந்த விஷயத்தில் மறுத்தாலும் அண்ணனுக்கு அனைத்துமாக இருக்கிறாராம் அசோக்குமார். கோவை, கரூர் மாவட்டங்களில் அண்ணனால் இருந்து கவனிக்க முடியாத சில பல பணிகளை அசோக்குமார் தான் கவனிக்கிறாராம். அமைச்சரிடம் இவரைத் தாண்டி எதுவும் நடக்காது என்று திமுகவினரே சொல்லுமளவுக்கு இருக்கிறது அசோக்குமாரின் அதிகாரக் கோட்டை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in