
உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்காக உதயநிதி ஸ்டாலின் கரூர் வந்தபோது, அவரை குளிர்விப்பதற்காக பெரும் கூட்டத்தை திரட்டிக்காட்டி பெயர் வாங்கினார் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஆனால், இப்படி திரட்டப்பட்ட கூட்டத்தில் பாதி பேர்கூட தேர்தலுக்கு சம்பந்தப்பட்ட நகர்ப்புற வாக்காளர்கள் இல்லையாம். ஊரகப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு சம்பளம்(!) கொடுத்து கூட்டி வந்திருந்தார்களாம். இந்த உண்மை புரியாமல், “இங்கே திரளாக வந்திருக்கிற நீங்கள் அத்தனை பேரும் ஓட்டுப் போட்டாலே எல்லா வார்டுகளையும் எளிதில் வென்றுவிடலாம்” என்று உதயநிதி பேசியதை, காமெடியாகச் சொல்லி சிரிக்கிறார்கள் கரூர்வாசிகள்.