இழுப்புத் திலகம் செந்தில் பாலாஜி

இழுப்புத் திலகம் செந்தில் பாலாஜி
அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தபோது...

அதிமுகவிடமிருந்து கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்ற, கைக்கர்ணம் போடுகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. மொத்தம் உள்ள 12 உறுப்பினர்களில் கூட்டணி தோழர்களையும் சேர்த்து, 9 பேரின் ஆதரவுடன் தலைவர் பதவியில் இருக்கிறார் அதிமுகவைச் சேர்ந்த கண்ணதாசன். இவருக்குப் பக்கத்தில் துணைத் தலைவராக இருந்த தானேஷ் முத்துக்குமார், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவியை ராஜினாமா செய்தார். இடைத்தேர்தலில் அவர் வகித்த கவுன்சிலர் பதவிக்கும் திமுகவை ஜெயிக்கவைத்துவிட்டார் செந்தில் பாலாஜி. இதையும் சேர்த்து திமுகவின் பலம் நான்காக இருந்த நிலையில், அலமேலு மனோகரன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் இருவரை தனது பராக்கிரமத்தால் திமுகவுக்கு இழுத்து பலத்தை ஆறாக உயர்த்திவிட்டார் அமைச்சர். துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் வந்தால், தங்களுக்கு வாக்களிக்க ஏதுவாக இன்னும் சிலரையும் சரிக்கட்டி வைத்திருக்கிறாராம் அமைச்சர். முதலில் துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்றி விட்டு, அதன் பிறகு தலைவர் பதவியில் இருப்பவரையும் திமுக கரை வேஷ்டிக்கு மாற்றுவது அல்லது திமுககாரரையே அந்த இடத்தில் உட்காவைப்பது - இதுதான் செந்தில் பாலாஜியின் தொலைநோக்குத் திட்டமாம். அதிமுக ஆட்சியில், புதுக்கோட்டையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காட்டிய அதே வித்தைகளை, செந்தில் பாலாஜி இப்போது கரூரில் காட்டிக் கொண்டிருக்கிறார்; அவ்வளவுதான்!

Related Stories

No stories found.