பரவும் தகவல்... பதறும் பாண்டியன்!

பரவும் தகவல்... பதறும் பாண்டியன்!
பாண்டியன்

எடப்பாடி மீது தனிப்பட்ட பிரியம் வைத்திருப்பவர், சிதம்பரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வான பாண்டியன். மாவட்டச் செயலாளராகவும் இருக்கும் இவர், தொடர்ந்து 2-வது முறையாக சிதம்பரத்தில் எம்எல்ஏ. அதிகாரத்தில் இருக்கும்போது மக்கள் சேவையை ஓரளவுக்காவது சரியாகச் செய்ததால்தான் மறுபடி எம்எல்ஏ-வாகி இருக்கிறார். இந்த நிலையில், அடுத்தமுறையும் வெற்றிபெற்றால் நிச்சயம் பாண்டியன் அமைச்சரவையில் பங்கு கேட்டு வருவார் என கணக்குப் போடும் உட்கட்சி எதிரிகள் சிலர், ‘20 வருடங்களுக்கு முன்பு, வெளிநாட்டில் இறந்த ஒருவரின் உடலுக்குள் தங்கக்கட்டிகளை வைத்து கடத்தி வந்தவர்தானே இந்தப் பாண்டியன். இப்ப எடப்பாடிக்கும் பினாமி கணக்காய் இருக்கிறார்’ என்றெல்லாம் இஷ்டத்துக்கு செய்திகளைப் பரப்புகிறார்களாம். நமக்கே தெரியாத விஷயங்களை எல்லாம், இப்படி இட்டுக்கட்டி பரப்பிவிடுவது யார் என்று தெரியாமல் மண்டை குழம்பிக் கிடக்கிறாராம் பாண்டியன்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in