போதும் செல்லூரார் சேவை!

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

அதிமுக உட்கட்சி தேர்தலில் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தங்கள் வசமிருக்கும் மாவட்டச் செயலாளர் பதவியை போட்டியின்றி தக்கவைத்து வரும் நிலையில், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரான செல்லூர் ராஜூவுக்கு எதிராக நான்கு பேர் கச்சைகட்டுகிறார்கள். “ராஜூவின் நடவடிக்கைகள் முன்ன மாதிரி இல்ல... கட்சிய குடும்பமா நினைக்கிறதுல தப்பில்லை. ஆனா, தன்னோட குடும்பம் மட்டும் தான் கட்சின்னு நினைக்கிறார் ராஜூ. தனக்கு அடுத்தபடியா தன்னோட மருமகன் கணேஷ் பிரபுவை கட்சிக்குள்ள முன்னிலைப்படுத்துறாரு.

வேட்பு மனுக்களை பெறும் செல்லூர் ராஜூ மருமகன்...
வேட்பு மனுக்களை பெறும் செல்லூர் ராஜூ மருமகன்...

இவரோட இந்த நடவைக்கை பிடிக்காம, இவருக்கு பக்கத்துல இருந்த ஜெயவேல் மாதிரியான ஆளுங்க பாஜக பக்கம் போய்ட்டாங்க. இப்பக்கூட பாருங்க, கட்சித் தேர்தலில் போட்டியிடுறவங்கட்ட வேட்பு மனு வாங்குறதுக்காக தலைமைக் கழகத்துல இருந்து முன்னாள் அமைச்சர் வளர்மதியும், சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.பி.கந்தனும் வந்திருந்தாங்க. நியாயப்படி பார்த்தா அவங்க தான் வேட்பு மனுக்களை வாங்கணும். ஆனா, செல்லூர் ராஜூ தனது மருமகனையும் வேட்பு மனுக்களை வாங்க வெச்சார். அமைச்சரா இருக்கும் போது கட்சிக்காரங்கள கண்டுக்காத ராஜூ, திமுக ஆட்சியில தனக்கு வேண்டியதை எல்லாம் பக்காவா சாதிச்சிக்குவாரு. இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டணும்னு தான் களத்துல இறங்கிருக்கோம். பத்து வருசம் இருந்துட்டாருல்ல... விட்டுக் குடுத்துட்டுப் போகட்டுமே” என்கிறது தெர்மோகோல் விஞ்ஞானிக்கு எதிராக ஆர்ப்பரித்துக் கிளம்பியிருக்கும் அதிருப்தி கோஷ்டி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in