செல்லூராரின் செல்லச் சிணுங்கல்!

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

அதிமுகவில் இருந்தாலும் இப்போதெல்லாம் அடிக்கடி பெரியார், அண்ணாவுடன் நிற்காமல் கருணாநிதி புகழும் பாடுகிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. அப்படியே, “பாஜகவுக்கும் திராவிடம்னா என்னன்னு தெரியுமா?” என்று பாடமும் எடுக்கிறார். ஆனாலும், மதுரை திமுகவினர் மீது அப்படியொரு வருத்தத்தில் இருக்கிறாராம் அண்ணன். அண்மையில் தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த செல்லூரார், “தம்பி... மதுரை அமைச்சருங்க பண்றது கொஞ்சங்கூட சரியில்ல தம்பி. அவங்க ஆட்சி அவங்க எவ்வளவு வேணுமின்னாலும் சம்பாதிக்கட்டும்; யாரும் தடுக்கல. ஆனா, எங்க ஆட்சியில ஏற்கெனவே ’செட்டில்’ பண்ணிய காண்ட்ராக்டரை கூப்பிட்டு கமிஷன் கேட்கிறாங்க தம்பி. அவங்க எங்ககிட்ட வந்து தலையச் சொறியுறாங்க. இதெல்லாம் நல்லாவா இருக்குது. புதுசா சம்பாதிக்க வேண்டியதுதானே? ஏன் அடுத்தவன் வயித்துக்குள்ள இருந்து தன்னோட சோத்தை எடுக்கணும்னு நினைக்காங்க” என்று புலம்பித் தீர்த்துவிட்டாராம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in