செல்லூரார் ஓபிஎஸ் பக்கம் செல்கிறாரா?

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் அங்கீகரிக்கப்பட்ட சமயத்தில், "அண்ணன் ஓபிஎஸ் அவர்களும் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்வோம்... ஈபிஎஸ்-ஓபிஎஸ் பிரிவு என்பது அண்ணனுக்கும் தம்பிக்கும் வரும் பிரிவைப் போன்றது தான்" என்றெல்லாம் செய்தியாளர்கள் மத்தியில் மதில் மேல் பூனையாகப் பேசினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. ஏற்கெனவே சசிகலா விவகாரத்திலும் சாஃப்டாகவே இருந்துவரும் செல்லூரார் இப்படிப் பேசியது அவர் ஓபிஎஸ் பக்கம் சாய்கிறாரோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியது. இந்நிலையில், இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வானது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பெழுதியது. இதையடுத்து, ஓபிஎஸ் தரப்புடன் இன்னும் இணக்கமாகப் பேசிவருகிறாராம் செல்லூரார். மதுரை அதிமுகவில், செல்லூராருக்கும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கும் இடையில் நீண்ட காலமாகவே பவர் பாலிடிக்ஸ் உண்டு. இந்த நிலையில், தற்போது செல்லூர் ராஜுவைவிட உதயகுமாருக்கே அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறார் ஈபிஎஸ். ஓபிஎஸ் வசமிருந்த சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியைக்கூட அண்மையில் உதயகுமாருக்கே வழங்கினார். செல்லூரார் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாகப் பேசிவருவதற்கு இந்த அதிருப்தியும் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in