எஸ்டிபிஐ மவுசு குறைவது ஏன்?

எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்
எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியானது ரொம்ப சாதுவாக, திமுகவின் துணை அமைப்பு போல இருக்கிறது என்று கருதிய இஸ்லாமிய இளைஞர்கள், இன்னும் கொஞ்சம் தீவிரமாக அரசியல் செய்யும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஆதரவளிக்கத் தொடங்கினார்கள். தேசிய லீக், தமுமுக, தவ்ஹீத் ஜமாத், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி என்று வீரியம் கூடிக்கொண்டே போய், கடைசியில் எஸ்டிபிஐ தான் இஸ்லாமிய இளைஞர்களின் விருப்பத் தேர்வானது. அவர்கள் ஒரு போராட்டம் நடத்தினால், அந்த ஊரே வியந்து மிரளும் அளவுக்கு மாஸ் காட்டினார்கள். இப்போது அந்த மாஸ் எல்லாம் காணாமல் போய்விட்டது. இந்த அமைப்பில் உள்ளவர்களின் தீவிரம், அப்பிராணி இந்துக்களையும் பாஜகவில் சேர்க்கத்தான் உதவுகிறதே தவிர, நமக்கு எந்தப் பலனையும் தருவதில்லை என்பதை இஸ்லாமிய இளைஞர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்திருப்பதே இதற்குக் காரணம் என்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in