கானை கைவைக்காதது ஏன்?

சையதுகான்
சையதுகான்

சசிகலாவை சந்தித்ததற்காக ஓபிஎஸ்சின் சொந்தத் தம்பியையே கட்சியைவிட்டு நீக்கினார்கள். ஆனால், சசிகலாவை கட்சியில் சேர்க்கச் சொல்லி பிள்ளையார் சுழி தீர்மானம் போட்ட தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் தெம்பாக இருக்கும் கான், மைக் கிடைக்கும் இடமெல்லாம் சசிகலா இணைப்பு விவகாரத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் அண்மையில் ஓபிஎஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர் மறுபடியும் சசிகலா, தினகரனை கட்சிக்குள் சேர்ப்பது பற்றியே பேசினாராம். இதற்கு கட்சி நிர்வாகிகள் சிலரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஓபிஎஸ்ஸோ, “மாவட்டம் ரொம்ப உணர்ச்சிவசப்படுகிறார்” என்று மட்டும் சொல்லிவிட்டுக் கடந்து போய்விட்டாராம். கலகம் செய்யும் கானை கைவைத்தால், அவரை இப்படியெல்லாம் பேசச்சொல்லி மேடை போட்டுக் கொடுக்கும் ஓபிஎஸ்சை என்ன செய்வது என்று புரியாமல்தான் எடப்பாடியார் அமைதிகாக்கிறார் போலிருக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in