எடப்பாடிக்கும் ஓர் ஆன்மிக பயணம்!

எடப்பாடிக்கும் ஓர் ஆன்மிக பயணம்!
ஜெயலலிதாவுடன் சசிகலா...

ஆன்மிக சுற்றுப் பயணத்தை அரசியலுக்கும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கும் புரட்சித் தாய் சசிகலா, மார்ச் 31-ம் தேதி சேலம் மாவட்டம் எடப்பாடிக்கும் செல்கிறார். இங்குள்ள நஞ்சுண்டேஸ்வரர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்தும் கொடுக்கும் இஷ்ட தெய்வமாம். அதனால் அவர் இங்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்த நஞ்சுண்டேஸ்வரரை தரிசிக்கத்தான் எடப்பாடிக்கு வருகிறாராம் சின்னம்மா. நஞ்சுண்டேஸ்வரரை வழிபட்ட கையோடு, சேலம் மாவட்டத்தில் எடப்பாடியார் மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுகவினரையும் சந்திக்க இருக்கிறாராம் சின்னம்மா. எடப்பாடிக்கே வந்துவிட்டதால் அடுத்ததாக, தனக்கு ஆதரவாக தீர்மானம் போடச் சொன்ன ஓபிஎஸ்சின் தேனி மாவட்டத்துக்கும் ஒரு ஆன்மிக அரசியல் பயணம் இருக்கும் என்கிறார்கள். அநேகமாக அது குச்சனூர் சனீஸ்வரனாகவும் இருக்கலாம் அல்லது வீரபாண்டி கௌமாரியம்மனாகவும் இருக்கலாம்.

Related Stories

No stories found.