ஒற்றைத் தலைமையை ரசிக்காத சசிகலா!

ஒற்றைத் தலைமையை ரசிக்காத சசிகலா!
சசிகலா

ஒற்றைத் தலைமை கோஷம் அதிமுகவில் ஓங்கி ஒலிக்கும் நிலையில், இலவு காத்த கிளியாக காத்திருக்கும் சசிகலா அதை அவ்வளவாய் ரசிக்கவில்லையாம். ஈபிஎஸ், ஓபிஎஸ் இவர்களில் யாரொருவர் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையாக வந்தாலும் தனக்கு சாதகமாக இருக்காது என்பது சின்னம்மாவின் கணக்கு. இன்னும் சில காலம் இரட்டைத் தலைமையின் கீழ் அதிமுகவுக்குள் குடைச்சல் நீடித்தால் தான் அதிமுகவுக்குள் தனது வரவு நல்வரவாக அமையும் என்பது அவரது திட்டம் என்கிறார்கள். சின்னம்மாவின் இந்தக் கணக்கைத் தெரிந்து கொண்டு ஆங்காங்கே ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்களை அமமுகவினரே அடித்து ஒட்டுகிறார்களாம். ஓபிஎஸ்சின் தேனி மாவட்டத்தில், ‘கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்கவிருக்கும் எடப்பாடி பழனிசாமி’ என போஸ்டர் ஒட்டிய நபர் அமமுகவைச் சேர்ந்தவர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in