
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு கூட்டத்தை, கேரளத்தின் கண்ணூரில் நடத்த தோழர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதில் மத்திய - மாநில அரசுகளின் உறவுநிலை குறித்து பேச காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர் எம்பி., முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ் ஆகியோரை அழைத்திருக்கின்றனர். ஆனால், இவர்கள் இருவரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கும் சசி தருரோ, இதுகுறித்து சோனியா காந்தியிடமே பேசினாராம். “மாநிலக் கமிட்டியின் ஆட்சேபனையையும் மீறி அந்தக் கூட்டத்தில் அவசியம் கலந்துகொள்ளத்தான் வேண்டுமா?” என்று கேட்டாராம் சோனியா. இதையடுத்து தோழர்களின் தோழமையான அழைப்பை ஏற்பதா நிராகரிப்பதா என முடிவெடுக்க முடியாமல் திண்டாட்டத்தில் இருக்கிறாராம் சசிதரூர்.