கோணலானது கோடீஸ்வர டாடியின் கணக்கு!

கோணலானது கோடீஸ்வர டாடியின் கணக்கு!
ஐ.பி உடன் ரத்தினம் அண்ட் கோ

சேகர் ரெட்டியின் கூட்டாளியும் கோடீஸ்வரருமான சர்வேயர் ரத்தினம், தனது மகனுக்காக திண்டுக்கல் மேயர் பதவியை குறிவைத்தார். திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே இழுபறி ஏற்படும் அந்தச் சந்தில் எப்படியாவது(!) தனது மகனை மேயராக்கிவிடலாம் என கணக்குப் போட்டு, மகனது வார்டுடன் சேர்த்து வேறு சில வார்டுகளிலும் பணத்தை இறக்கினார் ரத்தினம். ஆனால் கடைசி நேரத்தில், மாவட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி களத்தில் இறங்கியதால், கள நிலவரம் களேபரம் ஆனது. விளைவு, பெரும்பான்மையான இடங்களை திமுகவே பிடித்துவிட்டது. இதனால் ரத்தினத்தின் கனவு தகர்ந்து போனது. திமுகவே வெற்றிக் கொடி நாட்டியதால், சுயேச்சைகளும் அதிமுக கவுன்சிலர்களும் ஐ.பி கூப்பிடாமலேயே அவரது வீட்டுக்கு ஓடிப்போய் தங்களையும் திமுகவில் இணைத்துக் கொண்டார்கள். அந்தக் கூட்டத்தோடு கூட்டமாய் ரத்தினமும் தனது மகனை அழைத்துக் கொண்டுபோய் திமுகவில் ஐக்கியப்படுத்திவிட்டு வந்திருக்கிறார். அடுத்ததாக துணை மேயர் பதவிக்கு அப்பாவும் பிள்ளையும் அடிப்போட்டாலும் போடுவார்கள். ஏனென்றால், பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்று சொல்லி வைத்திருக்கிறார்களே!

Related Stories

No stories found.