சாமி ரவிக்கும் ஒரு திட்டம் இருக்கு!

சாமி ரவிக்கும் ஒரு திட்டம் இருக்கு!
சாமி ரவிக்கு வரவேற்பு

அண்மையில், தனது புதுக்கோட்டை சிறைவாசத்தை முடித்து விடுதலையானார் திருச்சியின் பிரபல ரவுடி சாமி ரவி. இந்தச் சிறைப்பறவையை வரவேற்க, சிறைவாசலில் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் காத்திருந்தார்கள். ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது எனக் கருதிய போலீஸார், சாமி ரவியை புறவாசல் வழியாக வெளியே அனுப்பிவைத்தனர். ஆனாலும் வரவேற்பு அணிவகுப்பை நடத்தி, அண்ணனை திக்குமுக்காடச் செய்துவிட்டார்களாம் அடிவருடிகள்.

சாமி ரவி
சாமி ரவி

திருச்சியின் பிரபல ரவுடியான பட்டறை சுரேஷ் ஐஜேகேவில் இணைந்து, மாநில பொறுப்புக்கு வந்து பகட்டு காட்டுவதுபோல், தானும் பவருக்கு வரவேண்டும் என்ற எண்ணம் ரவிக்கும் வந்திருக்கிறதாம். தற்போது அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியிலிருக்கும் ரவிக்கு அதைவைத்துப் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லையாம். அதனால், பிரதானக் கட்சி ஒன்றில் ஐக்கியமாக பிளான் போடுகிறாராம். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சாமி ரவியை சத்தமில்லாமல் சந்தித்துப் பேசியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் தடதடத்துக் கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.