பார்த்திபனுக்கு பக்கா ஸ்கெட்ச்!
பார்த்திபன்

பார்த்திபனுக்கு பக்கா ஸ்கெட்ச்!

அமைச்சர் கே.என்.நேருவின் களப்பணியில் எடப்பாடியாரின் சொந்த ஊரிலும் திமுக தனது வெற்றிக் கொடியை நாட்டி இருக்கிறது. ஆனால், முடிவுகள் தெரியவரும் முன்னதாக இதுபற்றி கருத்துத் தெரிவித்த சேலம் திமுக எம்பி-யான எஸ்.ஆர்.பார்த்திபன், “இருக்கும் நிலவரத்தைப் பார்த்தால் சேலம் மாவட்டத்துல எடப்பாடி கை தான் ஓங்கும் போலிருக்கிறது” என்று சொன்னாராம். ஆனால், முடிவுகள் திமுகவுக்கு சாதகமாகவே வந்துவிட்டது. இதையடுத்து, பார்த்திபனின் தேர்தல் கணிப்பை தலைமைக்கு வாசித்த அவரது எதிர் கோஷ்டியினர், “இவர் எப்பவுமே எடப்பாடிக்கு ஆதரவாத்தான் இருக்காரு” என்று எக்குத்தப்பாய் போட்டுவிட்டிருக்கிறார்களாம். பார்த்திபனின் கோஷ்டி அரசியலை தாங்கமுடியாமல் தகித்துக் கொண்டிருக்கும் திமுகவின் சேலம் மத்திய மாவட்ட நிர்வாகிகள் சிலர், இந்த விவகாரத்தை வைத்து அவரை வீழ்த்த பக்கா ஸ்கெட்ச் போட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

Related Stories

No stories found.