நேருவைப் பிடிங்க... நேரா அமைச்சராகிடலாம்!

நேருவைப் பிடிங்க... நேரா அமைச்சராகிடலாம்!
ராஜேந்திரன்

சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் முடிந்ததும் அமைச்சரவையில் மாற்றம் வருகிறது என்று சொல்லி ஊருக்குள் பலபேர் அமைச்சர் கனவில் மிதக்கிறார்கள். இன்னும் சிலர், நம்மை தூக்கினாலும் தூக்கிருவாங்களோ என வயிற்றில் புளியைக் கரைக்கும் அவஸ்தையில் இருக்கிறார்கள். இந்த வரிசையில், சேலம் மாவட்டத்திலிருந்து வெற்றிபெற்ற ஒரே ஒரு திமுக எம்எல்ஏ-வான ராஜேந்திரன் எப்படியும் தனக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என மலைபோல் நம்பிக்கொண்டிருக்கிறாராம். ஆனால், அவருக்கு அப்படியெல்லாம் நல்ல விஷயம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதில் சேலம் திமுக எம்பி-யான எஸ்.பார்த்திபன் கருத்தாய் இருக்கிறாராம். “அவரு கிடக்காருங்க... நீங்க பேசாம நம்ம மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு கிட்ட டோட்டலா சரண்டர் ஆகிடுங்க. அவரு நினைச்சா நிச்சயம் நீங்க மந்திரி ஆகிடலாம்” என்று ராஜேந்திரனுக்கு மாம்பல தேச திமுகவினர் சிலர் யோசனை சொன்னார்களாம். அதிலிருந்து நேருவின் கண்பார்வையிலேயே இருக்கிறாராம் ராஜேந்திரன்.

Related Stories

No stories found.