சிறைக்கு அனுப்பும் ‘சிறப்பான’ திட்டம்!

சிறைக்கு அனுப்பும்  ‘சிறப்பான’ திட்டம்!
வளத்தி குமார்

சேலம் மாநகராட்சி 47-வது வார்டு அதிமுக வேட்பாளர் பழனியம்மாளின் மகன் ஜவஹர். 49-வது வார்டைச் சேர்ந்த அதிமுக முக்கியப் புள்ளி வளத்தி குமார். கோடீஸ்வரர்களான இவர்கள் இருவரையும் செயின், பணம் பறிப்பு(!) வழக்கில் கைது செய்து உள்ளே தள்ளியிருக்கிறது போலீஸ். முன்னாள் திமுக புள்ளிகளான இவர்கள் இருவருமே, சேலம் மாநகரில் தாதா கணக்காய் வலம் வருபவர்கள். ஆனாலும் மேற்சொன்ன இரு வார்டுகளிலும் இவர்களுக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. இவர்களால் 2 வார்டுகளை அதிமுகவிடம் இழக்க விரும்பாத திமுக தலைகள், பக்காவாய் செயல்திட்டம் போட்டே கோடீஸ்வரர்களான இவர்கள் இருவரையும் சில்லறைக் கேஸில் சிறைக்குள் அனுப்பி முடக்கிவிட்டார்களாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in