அரிவாள் காணிக்கையும் அணிமாற்றும் சேவையும்!

வேலுமணி அரிவாள் காணிக்கை செலுத்தியபோது...
வேலுமணி அரிவாள் காணிக்கை செலுத்தியபோது...

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும், மதுரையின் முன்னாள் அதிமுக மேயரான ராஜன்செல்லப்பாவும் ஓபிஎஸ், சசிகலா நிலைப்பாட்டில் இருந்து மீண்டும் ஈபிஎஸ் பக்கம் மாறி விட்டார்களாம். இதற்குக் காரணம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என்கிறார்கள். மதுரையில் அதிமுக உட்கட்சித் தேர்தலை நடத்தும் பொறுப்பு வேலுமணியிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இதற்காக, கொங்கு நிர்வாகிகள் சகிதம் கடந்த வாரம் மதுரை வந்திருந்த வேலுமணி, அழகர் கோயிலில் இருக்கும் பதினெட்டாம்படி கருப்பருக்கு அரிவாள் காணிக்கை செலுத்தினார். அத்துடன், அவரும் அவருடன் வந்த கொங்கு மக்களும், மதுரை அதிமுக நிர்வாகிகளுக்கு ஈபிஎஸ் முகாம் மீது இருந்த அதிருப்திகளை எல்லாம் அடியோடு களையும் பொறுப்பையும் கண்ணும் கருத்துமாக கவனித்தார்களாம். இதையெல்லாம் பார்த்துவிட்டு, “இனிமேல், ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக மதுரைப் பக்கமிருந்து குரல் வருமா என்பது சந்தேகம் தான்” என்று கொளுத்திப் போடுகிறார்கள் மதுரை அதிமுககாரர்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in