பத்து மாதத்தில் 5 ஆட்சியர்கள்!

பத்து மாதத்தில் 5 ஆட்சியர்கள்!
சங்கர்லால் குமாவத்

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கடந்த 10 மாதத்தில் 5 ஆட்சியர்கள் மாற்றப்பட்டிருகிறார்கள். தேர்தலுக்கு முன்பு இருந்த வீரராகவ ராவ் மாற்றப்பட்டு, தேர்தலுக்காக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பொறுப்பேற்றார். தேர்தல் முடிந்ததும் பொன்ராஜ் மாற்றப்பட்டு சுந்தர்ராஜ் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. உடனே, “நம் மண்ணின் மைந்தர் நமக்கு மாவட்ட ஆட்சியராக வருகிறார்” என்று வாட்ஸ்அப்பில் வாணம் விட்டார்கள். விளைவு, இங்கு பொறுப்பேற்காமலேயே பைபாசில் தென்காசிக்கு அனுப்பப்பட்டார் சுந்தர்ராஜ். தென்காசிக்கு போகவேண்டிய சந்திரகலா ராமநாதபுரத்துக்குத் திருப்பப்பட்டார். ஆனால், திமுக மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கத்துக்கும், அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும் இடையில் நடக்கும் பனிப்போரை சமாளிக்க முடியாமல் தவித்த சந்திரகலா, வந்த வேகத்திலேயே மெடிக்கல் லீவில் போய்விட்டார். தற்போது, 5-வது ஆட்சியராக சங்கர்லால் குமாவத் பொறுப்பேற்றிருக்கிறார். ராஜஸ்தான்காரரான இவர் உஷார் பார்ட்டி என்கிறார்கள். எந்தச் சர்ச்சையிலும் சிக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் இவர், யார் போன் போட்டாலும், உதவியாளரை விட்டுப் பேசச் சொல்லியே சமாளித்துவிடுகிறாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in