தங்கத்தின் தன்னடக்க ரகசியம்!

தங்கத்தின் தன்னடக்க ரகசியம்!

நிச்சயம் தனக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்று மன உறுதியோடு இருந்த தங்கதமிழ்ச்செல்வன், ‘அதுக்கு வாய்ப்பில்ல ராஜா’ என தலைமை கைவிரித்ததும் கப்சிப் ஆகிவிட்டார். தங்கத்தின் அமைதிக்கு இதுமட்டுமே காரணமில்லையாம். ஏற்கெனவே, தேனி திமுகவில் எல்.மூக்கையா, ஜெயக்குமார், கம்பம் ராமகிருஷ்ணன், போடி லட்சுமணன் என 4 பேரும் 4 திசையில் ஓடிக் கொண்டிருக்க, இவர்களோடு ஒட்டாமல் தனி டிராக் ஓட்டுகிறார் தங்கம். சீனியர்களை மதிக்காமல், தன்னோடு தாவிவந்த அமமுக சொந்தங்களுக்கே அதிமுக்கியத்துவம் தருவதாக, தங்கத்தின் மீது அறிவாலயத்துக்கே புகார் போனதாம். அதற்கெல்லாம் பதில் சொல்லமுடியாமல்தான் தங்கம் இப்போது தன்னடக்கம் காக்கிறதாம்!

Related Stories

No stories found.