அடுத்த குறி ஆர்.பி.உதயகுமார்?

அடுத்த குறி ஆர்.பி.உதயகுமார்?

கடந்த அதிமுக ஆட்சியில், வளமான துறைகளில் ஒன்றான வருவாய் துறைக்கு அமைச்சராக இருந்தவர் ஆர்.பி.உதயகுமார். அதிகாரத்தைவிட்டு இறங்கிய பிறகு திமுக அரசுக்கு எதிராக பெரிதாக ஏதும் வாய்திறக்காமல் இத்தனை நாளும் அமைதியாக இருந்த இவர், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அண்மையில் அந்தஸ்து உயர்ந்த பிறகு அட்டாக் அரசியலை ஆரம்பித்திருக்கிறார். புதிய பதவியில் ஆக்டீவாக இருப்பதைக் காட்டிக்கொள்ள திமுக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி பேட்டியளிப்பதுடன் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் உதயகுமார். இது திமுக வட்டாரத்தை அதிகமாக சூடேற்றி வருகிறதாம். ”எங்களுக்கு மடியில் கணமில்லை... அதனால் வழியில் பயமில்லை” என்று அடிக்கடி சிரித்துக்கொண்டே சொல்வார் உதயகுமார். திமுக வட்டாரம் தகிப்பதைப் பார்த்தால் அடுத்ததாக அவருக்கும் வழியில் பயத்தைக் காட்டும் வகையில் ரெய்டு நடவடிக்கைகள் பாய்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in