பத்தாயிரம் குடுத்தும் பலனில்லாமப் போச்சே!

பத்தாயிரம் குடுத்தும் பலனில்லாமப் போச்சே!
பாலசுப்பிரமணியம்

“பணம் கொடுத்தவங்க எல்லாம் ஜெயிச்சுட்டாங்க” என்று சொல்லும் கூற்றை பொய்யாக்கி இருக்கிறார்கள், ராசிபுரம் நகராட்சியின் 11-வது வார்டு மக்கள். இந்த வார்டில், தனது மனைவி கவிதாவை அதிமுக வேட்பாளராக நிறுத்தி இருந்தார் முன்னாள் சேர்மன் பாலசுப்பிரமணியம். மனைவியை எப்படியும் ஜெயிக்கவைத்துவிட வேண்டும் என்பதற்காக, பணத்தை பணம் என்று பார்க்காமல் செலவழித்தார். மற்ற வேட்பாளர்கள் ஆயிரம் ரெண்டாயிரம் என எண்ணிக் கொண்டிருக்க, இவரோ ஓட்டுக்கு பத்தாயிரம் வரைக்கும் பட்டுவாடா செய்தார். இதனால் மற்ற வேட்பாளர்கள் மிரண்டு நிற்க, வெற்றி நமக்கே என கொண்டாட்டக் களிப்பில் இருந்தார் பாலு. ஆனால் கடைசியில், 363 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோற்றுப் போனார், இவரது மனைவி கவிதா. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மற்ற வேட்பாளர்கள் கொண்டாட்டத்தில் இருக்க, பாலசுப்பிரமணியமோ, “பத்தாயிரம் குடுத்தும் பலனில்லாமப் போச்சே” என புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

Related Stories

No stories found.