இவிங்கியளுக்கு நான் என்னெவெல்லாம் செஞ்சிருப்பேன்...

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் 6-ம் தேதி விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், அதற்கு முன்னதாக ஆளைத் தூக்கி உள்ளே வைத்துவிட வேண்டும் என்று மேலிடத்திலிருந்து ஹெவி பிரஷராம். அதனால் தூக்கத்தைத் தொலைத்து ஓடிய தனிப்படை போலீஸ் ஒருவழியாக ஆளை வளைத்துத் தூக்கிவிட்டது. கர்நாடகாவில் கைதான ரா.பா. இரவோடு இரவாக விருதுநகருக்குக் கொண்டுவரப்பட்டார். கடைசி நேரத்தில் தனக்கு யாராவது உதவிக்கு வரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளூர் ஆளும்கட்சித் தலைகள் சிலரை அப்ரோச் செய்ய முயற்சித்தாராம் ரா.பா. ஆனால், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே வாங்குப்பட்டுக் கிடக்கும் அவர்கள், எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் கம்மென இருந்துவிட்டார்களாம். இதனால் நொந்துபோன ரா.பா, ”இவிங்கியளுக்கு நான் என்னவெல்லாம் செஞ்சிருப்பேன்” என்று புலம்பித் தவித்துவிட்டாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in