போலீஸ் துணையுடன் ரா.பா?

ராஜேந்திரபாலாஜி
ராஜேந்திரபாலாஜி

லுக் அவுட் நோட்டீஸெல்லாம் போட்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வில்லன் கணக்காய் தேடிக்கொண்டிருக்கிறது விருதுநகர் போலீஸ். ஆனால், தனிப்படைகளின் எண்ணிக்கைதான் அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர, ஆள் சிக்கியபாடில்லை. தேர்ந்த சட்டப் புள்ளிகளை கைக்குள் வைத்துக்கொண்டு சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கும் ரா.பா., சாமி படத்து வில்லன் கணக்காய் கார்கள் மாறி மாறி வடமாநிலத்துக்கே போய்விட்டார், அங்கே ஹெலிகாப்டரில் சுற்றுகிறார் என்றெல்லாம் செய்திகளை சுற்றவிடுகிறார்கள். இருந்தாலும் உள்ளூர் போலீஸார் சிலரின் ஒத்துழைப்பு இருப்பதாலேயே ரா.பா எஸ்கேப் ஆகிக்கொண்டே இருக்கிறார் என சந்தேகிக்கும் காவல் துறை தலைமை, ரா.பா விவகாரத்தைக் கையாளும் பொறுப்பை தென்மண்டல ஐஜி வசம் ஒப்படைத்திருக்கிறதாம். சீக்கிரமே, ரா.பா குறித்து தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in